பயணிகள் கடும் அவதி... இன்று நள்ளிரவு வரை பரபரப்பான லண்டன் சர்வதேச விமான நிலையம் செயல்படாது!
உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று தான் லண்டனின் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம். இந்த விமான நிலையம் இன்று மார்ச் 21ம் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.59 மணிவரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.விமான நிலையத்துக்கு மின்சாரம் விநியோகிக்கும் மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனின் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை நள்ளிரவு 11.23 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாகவும் முதல்கட்டமாக 10 வாகனங்களில் வருகைதந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அப்பகுதியில் இருந்த 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, 200 மீட்டர் சுற்றளவுக்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர்.இந்த விபத்தின் காரணமாக புகைமூட்டம் அதிக அளவில் காணப்படுவதாலும் மின் விநியோகம் தடைபட்டதாலும் லண்டன் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை முழுவதும் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், லண்டன் விமான நிலையத்துக்கு வருகை தரவிருக்கும் அனைத்து விமானங்களும் வேறு விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.
பயணிகள் யாரும் விமான நிலையப் பகுதிக்கு வரவேண்டாம் எனவும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு விமானத்தின் நேரத்தை உறுதி செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு விமான நிலையங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான விமானங்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
