“ஏமாற்றிவிட்டார்” நடிகை சோனா திடீர் உண்ணாவிரத போராட்டம்!
பிரபல நடிகை சோனா எழுதி இயக்கியுள்ள வெப் சீரிஸ் ‘ஸ்மோக்’. ஷார்ட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து தனது யுனிக் புரொடக்சன் நிறுவனம் மூலம் அவரே தயாரித்தும் வந்தார்.

இந்த சீரிஸ் சோனாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சோனாவாக ஆஸ்தா அபே நடித்துள்ளார். இந்த சீரிஸின் மோஷன் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகியிருந்தது. சமீபத்தில் இதன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
விரைவில் இந்த வெப் சீரிஸ் ரிலீஸாக உள்ள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் புரொமோஷன் பணிகளை சோனா தொடங்கி சமீப காலமாக நிறைய பேட்டிகள் கொடுத்து வந்தார்.

இந்நிலையில் சோனா ஸ்மோக் வெப் சீரிஸின் ஹார்ட் டிஸ்கை தனது மேலாளர் தர மறுப்பதாகக் கூறி சென்னை ஃபெப்சி அலுவலகம் முன்பு திடீரென உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.
இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகை சோனா, அதில் தனது மேலாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அவர், ரூ.8 லட்சம் வரை ஏமாற்றி விட்டதாகவும் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
