குடிக்க பணம் கொடுக்கல... தந்தையை அடித்துக் கொலை செய்த மகன் !

இந்நிலையில் நேற்று முருகேசன் தனது தந்தையிடம் மது அருந்த பணம் கேட்டதாக தெரிகிறது. ஆனால், அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தை காராள கவுண்டரை விறகு கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து அங்கு வந்த மோகனூர் காவல் துறையினர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து முருகேசனை கைது செய்து போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில் தந்தை மது அருந்த பணம் தராதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!