24 வயசு தான்... உயிரிழந்த டிக்டாக் பிரபலம்…. ரசிகர்கள் அதிர்ச்சி!

 
24 வயசு தான்...  உயிரிழந்த டிக்டாக் பிரபலம்…. ரசிகர்கள் அதிர்ச்சி!  


துருக்கியில் வசித்து வரும்  டிக்டாக் பிரபலம் எபெகான் குல்தூர் . இவருக்கு வயது 24 மட்டுமே. இவர் அதிக உடல் பருமன் காரணமாக பல்வேறு மருத்துவ சிக்கல்களை எதிர்கொண்டு வந்தார். இதனால் கடந்த 3 மாதமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

எபெகான் குல்தூர்
எபெகான்  சாப்பாடு குறித்த  வீடியோக்களை  பதிவு செய்து ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளார்.   இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக எபெகான் குல்தூர் 7ம் தேதி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

எபெகான் குல்தூர்

எபெகான் குல்தூர் அக்டோபர் 15ம் தேதி பதிவிட்ட கடைசி வீடியோவில் உணவில் அதிக உப்பு சேர்ப்பதை குறைத்து இருக்கிறேன். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முயற்சி செய்து வருகிறேன் என கூறியிருந்தார். ஆனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி பல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார்.  அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?