அரசியலிலும் அவர் கேப்டன்... நடிகர் விஜயகாந்துக்கு பிரதமர் மோடி புகழாரம்!

 
கேப்டன்

இன்று திருச்சியில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, ``சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன்'' என நடிகர் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டி பேசினார். திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, “கடந்த 2023வது வருடத்தின் கடைசி சில வாரங்கள் கடினமானதாக இருந்திருக்கிறது.

கேப்டன்

கனமழை மக்களைக் கடுமையாக பாதித்தது. மேலும், சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்தை இழந்திருக்கிறோம். சினிமாவில் மட்டுமல்ல அவர் அரசியலிலும் கேப்டனாக இருந்து வந்திருக்கிறார்.

கேப்டன்

திரைப்படங்களில் அவரது செயல்பாடு காரணமாக மக்களின் இடத்தில் தனி இடம் பிடித்தார். அரசியல்வாதியாகவும் தேசிய நலனுக்கு அவர் முன்னுரிமை கொடுத்து வந்திருக்கிறார். அவருக்கு என் அஞ்சலியை காணிக்கை ஆக்குகிறேன். அவரது குடும்பத்திற்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். இதுமட்டுமல்லாது, மறைந்த விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார் மோடி.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web