பதவி பறிபோனது... ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய கர்நாடக டிஜிபி ராமசந்திர ராவ் சஸ்பெண்ட்!
சீருடை அணிந்த நிலையில் அலுவலகத்திலேயே பெண்களுடன் தகாத முறையில் நடந்துகொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
சமூக வலைதளங்களில் வெளியான 3 வீடியோக்களில், 2 வீடியோக்களில் ராமசந்திர ராவ் தனது அதிகாரப்பூர்வ சீருடையுடன் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது காவல்துறையின் கண்ணியத்தைக் குறைக்கும் செயல் என அரசு கருதுகிறது. இந்த லீலைகள் அனைத்தும் அவர் பணியில் இருந்தபோது, அவரது அலுவலகத்திலேயே நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவரது வளர்ப்பு மகள் நடிகை ரன்யா ராவ் துபாயிலிருந்து தங்கம் கடத்திய வழக்கில் ஏற்கனவே சிறையில் உள்ளார். மகளுக்குத் துணையாகத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி போலீஸ் வாகனத்தை விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்த புகாரிலும் ராமசந்திர ராவ் சிக்கியிருந்தார்.
இந்த வீடியோக்களை அவரே எடுத்தாரா அல்லது அவரைச் சிக்குவிக்க மர்ம நபர்கள் ரகசியமாகப் படம்பிடித்தார்களா என்பது குறித்துச் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வீடியோக்களின் பின்னணியில் இசை மற்றும் பாடல்கள் ஒலிப்பதால், இவை திட்டமிட்டுப் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வீடியோவில் உள்ள பெண்களின் முகங்கள் மறைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் யார்? துறை சார்ந்த பணியாளர்களா அல்லது வெளி நபர்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
