தொண்டர்களை செருப்பாக பயன்படுத்துகிறார்!! கடம்பூர் ராஜு ஆவேசம்!!

 
ஜோதி

அதிமுக - பாஜக இடையே கூட்டணி என்றாலும் நீண்டகாலமாகவே புகைச்சல் இருந்துகொண்டே இருந்தது. தற்போது அது வெடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் தமிழக பாஜகவில் இருந்து விலகிய சில நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த சி.டி.நிர்மல் குமார், அவரை தொடர்ந்து திலீப் கண்ணன், அம்மு என்கிற ஜோதி, கிருஷ்ணன், விஜய் உள்ளிட்டோரும் அதிமுகவில் இணைந்தனர். 

இதற்கு பதிலடியாக, மதுரையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் 50க்கும் அதிகமான அதிமுகவினர் பாஜகவில் இணைந்தனர். இப்படி பரபரப்பான சூழலில், கூட்டணி தர்மத்தை மீறியதாக எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை எரித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

எடப்பாடி பழனிசாமியின் உருவப்படம் எரிக்கப்பட்ட நிலையில், கண்டன சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்த பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் தினேஷ் உட்பட  4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பாஜகவை கண்டித்து அதிமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜோதி

இதனால் அதிமுக- பாஜக இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, எந்தவிணைக்கும் எதிர்விணை உண்டு என நேரடியாக எடப்பாடி பழனிசாமிக்கு மிரட்டல் விடுத்தார். இதனால் இந்த விவகாரம் மேலும் பெரிதானது.

இந்நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, பாஜக ஐடி விங் நிர்வாகி அதிமுகவில் இணைந்தது கண்டு அண்ணாமலை மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் ஏன் பதற்றப்பட வேண்டும். இது எங்களுக்கு புரியாத புதிராக உள்ளது.ஒரு கட்சியில் இருந்து பிரிந்து மற்ற கட்சிகளுக்கு செல்வது சகஜமான ஒன்று, அதிமுகவிலிருந்து பலரும் பாஜகவிற்கு சென்று உள்ளனர். அதிமுகவிற்கு பதிலாக திமுகவில் நிர்மல் குமார் இணைந்து இருந்தால் என்ன செய்திருப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.

கோவில்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருவருவ படத்தை எரித்தவர் ஒரு விளம்பர விரும்பி.  அவரை மனநல மருத்துவமனையில் தான் சேர்க்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், அவர் நடவடிக்கை எடுப்பது குறித்து பொறுத்து இருந்து பார்க்கலாம். அண்ணாமலை என்ன எதிர்வினை ஆற்றுவார் என்று பார்ப்போம், ஒன்றிய அரசு என்று கூறும் திமுகவிற்கு எதிராக பேசிதான் வருகிறார் தவிர எந்த எதிர்வினையும் அவர் ஆற்றவில்லை, என கடம்பூர் ராஜூ கூறினார்.

ஜோதி

முன்னதாக சிடிஆர். நிர்மல்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து, இன்று நான் பா.ஜ.க-வின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பா.ஜ.க தலைமை தொண்டர்களையும், கட்சியையும், செருப்பாகப் பயன்படுத்தி, கட்சியைப் பற்றி துளியும் சிந்திக்காது, சொந்தக் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதைப் போன்ற அல்பத்தனம், எதுவும் இல்லை.

தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் வியாபாரமாக்கி, இடத்துக்கு ஏற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையைப் பார்த்து, ஒவ்வொரு நாளும் வேதனையடைந்ததுதான் மிச்சம்.எல்லாவற்றுக்கும் மேலாக, நான் ஓர் அமைச்சருடன் கடுமையான சட்டப் போராட்டம் நடத்திவரும் நிலையில், அந்த அமைச்சரை வெளியில் வீரவேசமாக பேசிவிட்டு, திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்.தன்னை நம்பி இருக்கும் தொண்டர்களையும், கட்சியையும் ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை எப்படி நம்பி பயணிக்க முடியும்?" என தமிழக பாஜக தலைமைக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அவர் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web