கறிவிருந்து வைத்து 35 சவரன் நகை அபேஸ் செய்த சகோதரியின் கணவர்!!

 
வனிதா

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த நரேந்திரன் (26), மென் பொறியாளராக பனிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இளம்பெண் ஒருவருடன் திருமணம் நடந்தது. அப்போது, நரேந்திரனுக்கு உறவினர்கள் சிலர் விருந்து வைத்துள்ளனர். அதன்படி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி கே.கே.நகரில் உள்ள தனது சித்தி மகள் வனிதா வீட்டிற்கு தனது மனைவியுடன் கறி விருந்துக்கு சென்றுள்ளார் நரேந்திரன். 

மறுநாள் வீட்டிற்கு வந்த நரேந்திரன், தனது மனைவிக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடத்தினார். அப்போது, தாலி கயிறில் சேர்ப்பதற்காக பீரோவில் வைத்திருந்த குண்டு மணி மற்றும் கால் காசுகளை எடுக்க சென்றபோது, பீரோவில் வைத்திருந்த 35 சவரன் நகைகள் மாயமாகி இருந்தது.வீட்டின் பூட்டு உடைக்கப்படாமலும், வீட்டிற்கு உறவினர்கள் தவிர வேறு யாரும் வராத நிலையில், நகைகள் மட்டும் மாயமாகி இருந்ததால் நரேந்தரன் அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி வீட்டிற்கு வந்த உறவினர்களிடம் விசாரணை நடத்தியும் நகைகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

வனிதா

அதன்பேரில், நரேந்திரன் வீட்டின் அருகே உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, அதில் கே.கே.நகரில் வசித்து வரும் நரேந்திரனின் சித்தி மகள் வனிதாவின் கணவர் சுரேஷ் வந்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. உடனே போலீசார், வனிதாவை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், விருந்துக்கு நரேந்திரன் தங்களது வீட்டிற்கு வந்திருந்த நேரத்தில், யாருக்கும் தெரியாமல் அவரது வீட்டிற்கு சென்று தனது கணவர் சுரேஷ், நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதனை அறிந்த சுரேஷ் தலைமறைவாகி விட்டார். சுமார் ஓராண்டாக தலைமறைவாக இருந்துள்ளார். இந்த நிலையில் அண்மையில் சுரேஷ் செல்போன் சிக்னலை போலீசார் ஆய்வு செய்த போது, கோவை மதுக்கரை குரும்பபாளையம் ராமண்ணா தோட்டம் பகுதியில் இருப்பதாக சிக்னல் காட்டியது. உடனடியாக, மயிலாப்பூரில் இருந்து தனிப்படை போலீசார் கோவை சென்று அங்கு ஓராண்டாக பதுங்கி இருந்த சுரேஷை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

வனிதா

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நரேந்திரன் தனது பைக் சாவியுடன் வீட்டு சாவியை வைத்திருந்ததை கண்டேன். உடனே, நரேந்திரன் வீட்டில் உள்ள நகைகளை திருட வேண்டும், என எண்ணம் தோன்றியது. இதனால், நரேந்திரனிடம் கடைக்கு சென்று வருவதாக கூறி, அவரது பைக்கை வாங்கிக் கொண்டு, நேராக மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தேன்.சாவி மூலம் வீட்டை திறந்து பீரோவில் வைத்திருந்த 35 சவரன் நகைகளை எடுத்து கொண்டு, யாருக்கும் சந்தேகம் வராதபடி மீண்டும் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web