20 வயசு தான் ஆச்சு... இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்டு கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை!
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் கிராமத்தில், மாமியார் மற்றும் மாமனார் கொடுமை தாங்க முடியாமல் இளம்பெண் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன்பாகக் காவியா (20) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், "எனது மரணத்திற்கு எனது மாமியார் செந்தமிழ்ச்செல்வியும், மாமனார் பழனித்துரையும்தான் காரணம். அவர்கள் என்னை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சித்ரவதை செய்து வந்தனர். தனது கணவர் சிவபாலன் மிகவும் நல்லவர் என்றும், அவர் மீது எந்தத் தவறும் இல்லை என்றும் அந்த வீடியோவில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். மேலும் தனது மாமியார் மற்றும் மாமனார் தன்னுடன் சண்டையிடும் வீடியோ ஆதாரங்களையும் அவர் அந்தப் பதிவில் இணைத்திருந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாகக் காவியாவின் கணவர், அவரைப் பாதுகாப்பிற்காக அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார். ஆனால், அங்கு நிலவிய மன அழுத்தத்தால் விரக்தியடைந்த காவியா, நேற்று இரவு தனது 6 மாதப் பெண் குழந்தையைத் துப்பட்டாவால் தனது வயிற்றுடன் கட்டிக்கொண்டு அருகில் இருந்த கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

காவியாவின் தற்கொலை வாக்குமூல வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, வாய்மேடு போலீசார் விரைந்து செயல்பட்டனர்: அரசுப் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றும் மாமியார் செந்தமிழ்ச்செல்வியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளரான மாமனார் பழனித்துரையைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
