தலைமைக் காவலர் கைது... நடந்தது என்ன?.. பரபரக்கும் போலீஸ் வட்டாரம்!

 
செம்மரம்

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (45). இவர் ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். மேலும், அக்காவல் நிலைய ஆய்வாளருக்கு ஓட்டுநராகவும் பணியாற்றினார்.

செம்மரம்

சந்திரசேகர், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 17-ம் தேதி இரவு சந்திரசேகர் பணியாற்றிவிட்டு ஓய்வெடுக்கச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம், சத்தியவேடு காவல் நிலைய போலீசார் சந்திரசேகர் மற்றும் 14 பேரை செம்மரம் கடத்தியதாகப் பிடித்துள்ளனர். அவர்களிடமிருந்து 3 டன் செம்மரக்கட்டைகள், 2 கார்கள், ஒரு சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

செம்மரம் கடத்திய தமிழர்கள் கைது

விசாரணைக்கு பின்னா், 15 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவா் என்றும் ஆந்திர மாநில காவல்துறை அறிவித்துள்ளது. சென்னை தலைமைக் காவலர், ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள சம்பவம் தமிழ்நாடு போலீசார் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web