தவெக மேடையில் குத்தாட்டம் போட்ட தலைமை ஆசிரியை... அதிரடி சஸ்பெண்ட் !

 
தஞ்சாவூர் தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர் மேடையில் நடனமாடிய சம்பவம் கல்வித்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கரநாதர்குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வரும் கிருஷ்ணவேணி என்பவர் அந்த விழாவில் கலந்து கொண்டு நடிகர் விஜய்யின் சினிமா பாடலுக்கு உற்சாகமாக நடனமாடியுள்ளார். அரசுப் பணியில் இருந்துகொண்டு அரசியல் கட்சி மேடையில் ஆசிரியை ஆட்டம் போட்ட விவகாரம் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

தலைமை ஆசிரியை மேடையில் நடனமாடியதை அங்கிருந்தவர்கள் தங்களது கைபேசிகளில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட அது காட்டுத்தீயாகப் பரவியது. ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர் இதுபோன்ற பொது இடங்களில் கண்ணியம் குறைவாக நடந்து கொள்வது முறையல்ல எனப் பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். ஆசிரியையின் இந்தச் செயல் அரசுப் பணியாளர் நடத்தை விதிகளை மீறியதாகக் கருதப்பட்ட நிலையில் மாவட்டக் கல்வி அதிகாரிகள் இது தொடர்பாக ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சமூக வலைதளங்களில் வைரலான அந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பட்டுக்கோட்டை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் தற்போது அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதன்படி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணியைப் பணியிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளார். அரசியல் கட்சி விழாக்களில் அரசு ஊழியர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது சட்டப்படி தவறு என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!