இன்று ஓய்வு பெறும் நாளில் சுகாதார அலுவலர் சஸ்பெண்ட்... போலி சான்றிதழ் கொடுத்தது அம்பலம்!
தென்காசி மாவட்டத்தில், கீரை கட்டு மோசடி வழக்கில் சிக்கிய சுகாதார அலுவலர் போலி சான்றிதழ் புகாரில் சிக்கி ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வழங்க கீரை உள்ளிட்ட காய்கறிகள் ஒப்பந்தக்காரர்களால் பெறப்பட்டது. 2022 - 2023 காலகட்டத்தில் 30 ரூபாய்க்குள் வாங்க வேண்டிய ஒரு கிலோ கீரையை, 80 ரூபாய்க்கு வாங்கியதாக பில்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக சுமார் 6 லட்சத்து 59,893 ரூபாய் மோசடி செய்தது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தென்காசி சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் நிர்வாக அலுவலராக பணிபுரிந்த ஸ்ரீபத்மாவதி இந்த பணமோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இந்நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்மாவதி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டர். இன்று 31-5.2025 ம் தேதி அவர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக இருந்தார்.

அவர் இதற்கு முன்பு பணியாற்றிய மருத்துவமனைகளில் எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லை என்பதற்கான சான்றிதழை, அவர் பணியாற்றிய தென்காசி அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் தூத்துக்குடி மருத்துவமனை நிர்வாகம் கோரியுள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகம் அவர் மீது ஒரு குற்றச்சாட்டு உள்ளதாகவும், அதாவது ஒரு கிலோ கீரை கட்டு ரூ.80 வீதம் வாங்கி ஊழலில் ஈடுபட்டதாக ஒரு குற்றச்சாட்டு விசாரணையில் இருப்பதாகவும் கூறி non என்.ஓ.சி கொடுத்த நிலையில், இந்த சான்றிதழை தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிர்வாக அதிகாரியாக இருந்த பத்மாவதி மாற்றம் செய்து தனது பணியில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்பது போல போலி சான்றிதழ் ஒன்றை தயாரித்து மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் சமர்ப்பணம் செய்துள்ளார்
கீரை கட்டு ஊழலால் தான் பணியிட மாற்றத்தில் சில நாட்களுக்கு முன்பு வந்த நிலையில் சந்தேகம் அடைந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் இது தொடர்பாக தென்காசி மருத்துவமனைக்கு கேட்ட போது தாங்கள் கொடுத்த சான்றிதழ் இது இல்லை என கூறவே, அதிர்ச்சியடைந்த தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்வாக அதிகாரியாக இருந்த பத்மாவதி திருவாரூர் மாவட்டத்திற்கு பணியிடம் மாற்றம் செய்த நிலையில் இன்று பத்மாவதி ஓய்வு பெற இருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓய்வு பெறும் நிலையில், பிரச்சனை இல்லாமல் பணி ஓய்வு பெறுவதற்காக போலிச் சான்றிதழ் தயாரித்த பத்மாவதி கீரை ஊழல் வழக்கில் மட்டுமே சிக்கி இருந்தார். தற்போது அவரது ஓய்விற்காக போலி சான்றிதழ் தயாரித்தது எப்படி? அவருக்கு உதவியது யார்? அவர் மேலும் என்னென்ன ஊழலில் ஈடுபட்டார் என விரிவான விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தற்போது கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
