பகீர் வீடியோ... ப்ளீஸ் ... காப்பாத்துங்க... நெஞ்சு வலியுடன் வந்தவர் துடிதுடித்து பலி… அரசு மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியம்...!
திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாகடா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அதிகாலை 1.30 மணியளவில் பிஸ்மீர் (37) மார்பு வலியுடன் வந்தார். மூச்சு விட முடியாமல் துடித்த அவர், “எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள், எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்” என கதறியதாக கூறப்படுகிறது.
"எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்க... எனக்கு மூச்சு விட முடியல, எனக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க"
— கரன் (@kajan1215) January 27, 2026
மரண விழும்பில் ஒரு தந்தையின் கூக்குரல் - மருத்துவமனையின் அலட்சியத்தால் போராடிய உயிர் பிரிந்தது.
மூச்சு விட சிரமப்பட்டபோதும், 37 வயது பிஸ்மீர் தனது இரு குழந்தைகளின் எதிர்காலத்தை… pic.twitter.com/XQKLT4yiPY
ஆனால் அங்கு இருந்த மருத்துவ ஊழியர்கள் அவருக்கு முதலுதவி கூட அளிக்கவில்லை. ஆக்சிஜன் வசதியும் வழங்கப்படவில்லை. நாற்காலியில் அமர வைத்து கேள்விகள் மட்டுமே கேட்டனர். இந்த அலட்சிய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
பின்னர் பிஸ்மீரை ஆம்புலன்ஸில் அனுப்பினர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் கேரளா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #JusticeForBismeer என்ற ஹேஷ்டேக் மூலம் நீதி கோரி மக்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
