நெஞ்சை உலுக்கும் சோகம்..!! தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் 2 நாட்கள் வாழ்ந்த சிறுவன்!!

 
அன்னம்மா

பெங்களூரின் யஷ்வந்தபுரம் ஆர்.டி.நகர் அருகே உள்ள கங்கா நகரில் அன்னம்மா (45) எனும் பெண்மணி வசித்து வந்துள்ளார். அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருந்துள்ளது. மேலும் இவர் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி ஆவார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அன்னம்மாவின் கணவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். அதற்கு முன்னர் வரை சொந்த வீட்டில் வசித்து வந்த அன்னாமாவுக்கு கடன் அதிகமானதால் வாடகை வீட்டில் குடியேறியுள்ளார். குடும்பத்திற்கு வருமானம் ஏதும் இல்லாததால் தனது 11 வயது மகனை படிக்க வைக்க வீட்டு வேலைக்கு சென்றிருக்கிறார்.

அன்னம்மா

இந்த நிலையில், இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக உடல்நல குறைவு காரணமாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். தன்னுடைய மகனுடன் படுத்து தூங்கிய அன்னம்மா எழுந்திருக்கவில்லை. குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக தூங்கும் போதே அன்னம்மா உயிர் இழந்திருந்தார். தன்னுடைய தாய் உயிர் இழந்து விட்டது பற்றி தெரியாமலும், அவர் தூங்கி கொண்டு இருப்பதாகவும் சிறுவன் சூர்யா நினைத்து கொண்டு இருந்தான்.

மகனும் தாய் உறங்குகிறார் என்று நினைத்து பள்ளிக்கு சென்றிருக்கிறான். காலையில் பள்ளிக்கு சென்று மாலையில் வீடு திரும்பியுள்ளான். முதல் நாள் இரவில் பக்கத்து வீட்டுக்காரர்கள் சிறுவனுக்கு உணவு கொடுத்து உதவியிருக்கிறார்கள். அடுத்த நாளும் சிறுவன் பள்ளிக்கு சென்று திரும்பியிருக்கிறான். முந்தைய நாளை போலவே அன்றும் பக்கத்து வீட்டுக்காரர்கள் உணவு கொடுத்திருக்கிறார்கள். அடுத்த நாள் காலையில் சிறுவன் பள்ளிக்கு கிளம்பும் போது அன்னம்மாவை பார்த்திருக்கிறார்.

அன்னம்மா

அப்போது அன்னம்மாவின் மூக்கு மற்றும் காதில் இருந்து வித்தியாசமான திரவம் கசிந்திருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த சிறுவன் தனக்கு உணவு கொடுத்த பக்கத்து வீட்டுக்காரரிடம் இது குறித்து கூறியிருக்கிறார். அவர்கள் வந்து பார்க்கையில் அன்னம்மா உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் அன்னம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சந்தேகத்திற்கிடமான வகையில் மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தாய் இறந்தது பற்றி அறியாமல், அவரது பிணத்துடன் சிறுவன் 2 நாட்கள் இருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

 

From around the web