நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ... தீப்பிடித்து எரிந்த குடிசையிலிருந்து புத்தகங்களுடன் ஓடி வந்த சிறுமி!

 
நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ... தீப்பிடித்து எரிந்த குடிசையிலிருந்து புத்தகங்களுடன் ஓடி வந்த சிறுமி!

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அம்பேத்கர் நகரின் அராய் கிராமத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தில் குடியிருப்புக்கள் கட்டப்பட்டு இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் மார்ச் 21ம் தேதி புல்டோசர் கொண்டு குடிசை வீடுகள் இடிக்கப்பட்டன. அப்போது, 8வயது சிறுமி அனன்யா யாதவ் வீடும் இடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தின்போது ஒரு வீடு தீப்பிடித்து எரியத் தொடங்கிவிட்ட நிலையில், அனன்யா தனது குடிசை வீட்டை நோக்கி ஓடிச் சென்று தனது புத்தகங்களை எடுத்துக்கொண்டு வெளியே ஓடி வந்தார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் பெற்றது.

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் அமர்வு புதன்கிழமை இந்த வழக்கை விசாரித்ததில் இந்த வீடியோ ஒவ்வொருவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து நீதிபதி புயான் , ’’புல்டோசர்களால் சிறிய குடிசைகள் இடிக்கப்படும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இடிக்கப்பட்ட ஒரு குடிசையிலிருந்து ஒரு சிறுமி கையில் புத்தகங்களுடன் ஓடி வருவது ஒவ்வொருவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகளின் எதிர்காலத்தை நாசமாக்குபவர்கள் உண்மையில் வீடற்றவர்கள் எனக் கூறியிருந்தார். இந்த வீடியோவிற்கு பலரும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்த சிறுமிக்கு கல்வி நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்.

நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ... தீப்பிடித்து எரிந்த குடிசையிலிருந்து புத்தகங்களுடன் ஓடி வந்த சிறுமி!

இது குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில், “ இந்தப் பெண்ணைப் படிக்க வைப்பதாக நாங்கள் உறுதிமொழி எடுக்கிறோம். படிப்பவர்களுக்கு மட்டுமே கல்வியின் மதிப்பு தெரியும். புல்டோசர் என்பது அறிவு, புரிதல் அல்லது ஞானத்தின் சின்னம் அல்ல, அழிவு சக்தியின் சின்னம். ஒரு புல்டோசர் ஆணவம் என்ற எரிபொருளால் இயக்கப்படுகிறது. பெருமையின் சக்கரங்கள் மீதேறி நகர்கிறது. அதில் நீதியின் கடிவாளம் இருப்பதில்லை" என பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web