நெஞ்சை உலுக்கும் கோரம்... லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவி பலி... தந்தை கண் முன்னே துடிதுடித்து உயிர் பிரிந்த சோகம்!

 
கன்னியாகுமரி கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையம் முன்பாக இன்று காலை ரத்தத்தை உறைய வைக்கும் ஒரு விபத்து அரங்கேறியுள்ளது. சிற்றாற்றின்கரை பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரரான கிறிஸ்துராஜ் என்பவர், தனது மகள் ஹாட்லின் அபினாவுடன் இருசக்கர வாகனத்தில் அந்தப் பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் சற்றும் எதிர்பாராத விதமாக, பின்னால் அதிவேகமாக வந்த கனிம வளங்கள் ஏற்றிய கனரக லாரி ஒன்று இடி மின்னல் வேகத்தில் அவர்களது பைக் மீது பயங்கரமாக மோதியது.

விபத்து

இந்தக் கோர விபத்தில் லாரியின் ராட்சத சக்கரம் ஏறியதில், கல்லூரி மாணவியான ஹாட்லின் அபினா தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் தனது தந்தை கண் முன்னே துடிதுடித்துச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய அந்தத் தந்தை, மகளின் உடலைப் பார்த்து கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களின் கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ்

இந்தத் துயரச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர், விபத்தை ஏற்படுத்திய லாரியைச் சிறைபிடித்துச் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்டுப்பாடின்றிச் செல்லும் கனிம வள லாரிகளால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதாகக் கூறி மக்கள் முழக்கமிட்டதால் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பி ஓடிய லாரி ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருவதுடன் விபத்து நடந்த இடத்தில் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்