நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ.. அதிவேகமாக சென்ற பைக் கட்டிட சுவரில் மோதி தூக்கி வீசப்பட்டு பலியான மருத்துவ மாணவர்!
தெலங்கானாவைச் சேர்ந்த 21 வயது மாணவர் அஷ்ரித் வியட்நாமில் படித்து வருகிறார். இவர் பைக்கில் வேகமாக சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதி உயிரிழந்தார். இக்கோர விபத்து சம்பவம் ஜூன் 4ம் தேதி நடந்தது.
వియత్నాంలో తెలంగాణ విద్యార్థి మృతి
— Telugu Scribe (@TeluguScribe) June 5, 2025
బైక్ పై వేగంగా వెళ్తూ గోడని ఢీకొట్టి మృతి
కొమురం భీమ్ ఆసిఫాబాద్ జిల్లా కాగజ్ నగర్ కు చెందిన ఎంబీబీఎస్ విద్యార్థి వియత్నాం దేశంలో దుర్మరణం
కాగజ్ నగర్ పట్టణంలోని మార్కెట్ ఏరియాలో బట్టల వ్యాపారి అర్షిద్ అర్జున్- ప్రతిమ దంపతులకు కుమారుడు అర్షిద్… pic.twitter.com/CBSXX4Ccs8
அந்த பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளில் இந்த விபத்து குறித்த பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 3ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்த அர்ஷித், தெலங்கானா மாநிலத்தின் காகசுநகர் நகரில் வசித்து வரும் வியாபாரி அர்ஜுனின் மகன் ஆவார்.
அர்ஷித் தனது 150cc பைக்கில் நண்பருடன் மிகவும் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார். மழையால் வளைவில் கட்டுப்பாட்டை இழந்த அவர் எதிர்பாராதவிதமாக சாலையின் பக்கத்தில் உள்ள கட்டிட சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அர்ஷித் மற்றும் அவரது நண்பர் இருவரும் காற்றில் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த மோசமான மோதலில் அர்ஷித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவக் கனவுடன் வெளிநாட்டில் கல்வி படித்து வந்த இளம் மாணவனின் மரணம், அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
