நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ... பாதுகாவலர் ஏழெட்டு தெருநாய்கள் கடித்து குதறல்!

 
 பாதுகாவலர்  ஏழெட்டு தெருநாய்கள் கடித்து குதறல்
மகாராஷ்டிரா மாநிலத்தில் பல பகுதிகளில் தெருநாய்களின் தொந்தரவு அதிகரித்து வருகிறது. சின்னஞ்சிறு குழந்தை தொடங்கி வயதானவர்கள் வரை இந்த நாய்கள் யாரையும் விடுவதாக இல்லை. பல நேரங்களில் கடித்து விடுகின்றன. 

அப்பகுதிவாசிகள் செய்வதறியாது திகைக்கின்றனர். அந்த வகையில் மும்பையின் அந்தேரியில் பாதுகாவலர் ஒருவரை 7 முதல் 8 தெருநாய்கள் ஒன்றாக சேர்ந்து சுத்து போட்டன. இது குரித்த  வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பாதுகாவலரை 7, 8 தெரு நாய்கள் கடிக்க முற்பட்டது. 



அப்போது பாதுகாவலர் தன்னை காப்பாற்றிக் கொள்ள, தான் கையில் வைத்திருந்த கம்பை வைத்து நாய்களை தடுத்தார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர் விரைந்து வந்து பாதுகாவலரை சராமாரியாக தாக்குதல் நடத்தினார்.  


குற்றம் செய்யாத பாதுகாவலரை தாக்கிய அந்த நபர் அடையாளம் தெரியாதவர். இந்த சம்பவம் பாதுகாப்பு பணியில் உள்ளவர்களின் பாதுகாப்பை பற்றிய கேள்வியை எழுப்பி உள்ளது. இந்த சம்பவத்தில் பாதுகாவலர் பலத்த காயம் அடைந்தார். அதோடு அந்த நபரிடம் தயவாய் தன்னை விடுங்கள் என்று கெஞ்சியதாக கூறப்படுகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?