நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ... அப்... பா... கதற கதற தூக்கி சென்று 14 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் !

 
ஓசூர்


தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர்  அஞ்செட்டி அருகே, கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000  அடி உயரத்தில், ஒன்னேபுரம், சித்தப்பனூர், சிக்கமஞ்சி, கிரியானூர், பெல்லட்டி, தொட்டமஞ்சி என 20க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 5000க்கும்  மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு 20 கிமீ தொலைவில் உள்ள அஞ்செட்டிக்கு சென்று அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில், அங்குள்ள மலைகிராமத்தை சேர்ந்த 7ம் வகுப்பு வரை படித்த 14 வயது சிறுமியின் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர். அந்த சிறுமிக்கும், காலிகுட்டை பகுதியில் வசித்து வரும் 30 வயது மாதேஸ்  என்பவருக்கும்  மார்ச் 3ம் தேதி பெங்களூருவில் திருணம் நடந்தது. பின்னர் இன்று அந்த சிறுமியை, மலைகிராமத்தில் உள்ள அவரது கணவர் வீட்டிற்கு அழைத்து வந்தனர். 

ஓசூர்

ஆனால் சிறுமி தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.  உறவினர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக தோளில் தூக்கிகொண்டு சென்று கணவர் வீட்டில் மீண்டும் விட்டுள்ளனர். அப்போது அந்த சிறுமி கதறி அழுததை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்ளில் பதிவிட்டுள்ளனர். இது மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web