மூட நம்பிக்கையால் விபரீதம்... பச்சிளம் குழந்தைக்கு இரும்பு கம்பியால் 40 முறை சூடு ...!

 
குழந்தை சூடு
 

ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டம் ஹண்டல்படா கிராமத்தில்  வசித்து வந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆகியுள்ளது. சில நாட்களில் இந்த  பச்சிளம் குழந்தைக்கு  உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

ஒடிசா

பெற்றோர்கள் குழந்தையின் உடலுக்குள் தீயசக்தி புகுந்துவிட்டதாக நினைத்த குடும்பத்தினர், குழந்தையை மறுத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லவில்லை. அதற்கு மாறாக தீயசக்தியை விரட்ட வேண்டும் என கூறி பச்சிளம் குழந்தையின் தலை, வயிறு பகுதியில் இரும்பு கம்பியால் 40 முறை சூடு வைத்துள்ளனர்.  இரும்பு கம்பியால் சூடு வைத்ததில் குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாகி  உடல்நலக்குறைவு அதிகரித்துள்ளது. குழந்தையின் நிலைமை மோசமாக குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

இரும்பு கம்பி

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள்  குழந்தையின் உடலில் இரும்பு கம்பியால் சூடு வைத்த அடையாளங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல்கள் தெரிவித்தனர்.  விரைந்து வந்த அதிகாரிகள் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சிளம் குழந்தையின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக  மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web