பொதுமக்கள் கடும் அவதி... தமிழகத்தில் 3 இடங்களில் சதமடித்த வெயில்... !

தமிழகத்தில் பொதுவாக ஏப்ரல் மே மாதங்களில் தான் கோடை வெயில் கொளுத்துவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மார்ச் மாதம் முதலே பல பகுதிகளில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகி வருகிறது. அந்த வகையில் இன்று கரூர், ஈரோடு , மதுரை மாவட்டங்களில் வெயில் சதமடித்துள்ளது.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக ஆந்திராவின் கர்னூலில் இன்று 102.92 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதே போல் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், கோடை காலத்தின் தொடக்கத்திலேயே வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதன்படி கரூர் பரமத்தியில் 100.4 டிகிரி, ஈரோட்டில் 100.76 டிகிரி அளவிற்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையம் பகுதியில் 99.86 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!