இந்த மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்.. பாதுகாப்பா இருங்க மக்களே... !

 
உ.பி கன மழை

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு மற்றும் வடகிழக்கு பருவமழை  காரணமாக பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழை ஜனவரி வரை மேலும் நீடிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்   இன்று  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

கன மழை

இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.  

கனமழை  மழை

 ஏற்கனவே டிசம்பர் முதல்வாரத்தில் வட மாவட்டங்களிலும்  அடுத்த வாரத்தில் தென் மாவட்டங்களிலும் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தற்போது தான் மீட்பு பணிகள் நிறைவடைந்து படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web