அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு ... நாளை பல பகுதிகளுக்கு கனமழை அலெர்ட்!
தெற்கு அந்தமான் கடல் மற்றும் மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு இன்று (22-11-2025) காலை உருவாகி மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்றது. இது வரும் 24ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்குப் பின் 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலை காரணமாக இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 23ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலான நாட்களிலும் தமிழகத்தின் தென் மற்றும் கிழக்கு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம். வானிலை அமைப்பின் நகர்வு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், மீனவர்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
