கன மழை... பவானி ஆற்றில் கதவணை ஷட்டர்கள் பழுதால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்... பொதுமக்கள் கடும் அவதி!

 
பவானி ஆறு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கதவணை ஷட்டர்கள் திடீரென பழுதானதால் குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெய்த கன மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 82 அடியில் இருந்து ஒரே நாளில் 9 அடியாக உயர்ந்தது. இதனால் அணையின் நீர் மட்டம் 91 அடியாக உயர்ந்தது.
இதனிடையே பில்லூர் அணைக்கு வரும் நீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. சுமார் 6000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. நீலகிரி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கனமழை வெள்ளம்

இந்த தண்ணீர் சமயபுரம், வெள்ளிப்பாளையம் தடுப்பணைகளில் தேக்கி வைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. பிறகு தண்ணீர் மீண்டும் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு கன மழை செய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக கல்லாரில் வெள்ளப்பெருக்கி ஏற்பட்டது. இந்த வெள்ள நீரால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனிடையே கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்திட வெள்ளிப்பாளையம் மின் உற்பத்தி நிலைய தடுப்பணையில் உள்ள தண்ணீரை ஷட்டர்கள் மூலம் திறந்துவிட அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் திடீரென தண்ணீர் வெளியேற்ற முடியாத வகையில் தடுப்பணையின் ஷட்டர்கள் அடைத்து கொண்டன. இதனால் பவானி ஆற்றில் இருந்து வந்த நீர் ஆற்றுக்கு திருப்பிவிட முடியாத நிலையில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது.

இன்று வடகிழக்கு பருவமழை  தொடக்கம்!      நம்ம மாவட்டத்திற்கு கனமழை !

இதனிடையே சிக்கதாசம்பாளையம், ஓடந்துறை ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனிடையே குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த நீரால் பொதுமக்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக எடுத்தும் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web