கனமழை எதிரொலி... உதகையில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடல்!
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கனமழை எச்சரிக்கை எதிரொலி காரணமாக இன்று ஒரு நாள் உதகையில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படுகிறது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஊட்டியில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, உதகை, பைக்காரா படகு இல்லம் என அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று ஒரு நாள் முழுவதுமாக மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தொட்டபெட்டா காட்சி முனை, பைன் ஃபாரஸ்ட், சூட்டிங் மட்டம், பைக்காரா நீர்வீழ்ச்சி. அவலாஞ்சி சூழல் சுற்றுலா மையம், டால்பின் நோஸ், லேம்ஸ் ராக் சுற்றுலா தலங்கள் என அனைத்து இடங்களுக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் முன்கூட்டியே கோடை விடுமுறைக்கு திட்டமிட்டு வந்திருந்த சுற்றுலா பயணிகள் திடீர் கனமழையால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
