9 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்... பத்திரமா இருங்க மக்களே...!

 
கனமழை  மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக வட மற்றும் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை பெய்தது. தற்போது இந்திய பெருங்கடல் பகுதிகளில்   வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.  

உ.பி கன மழை

இதன் காரணமாக தமிழகம்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும். நாளை டிசம்பர் 25 ம் தேதி திங்கட்கிழமை  தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும்.  

மழை
இன்று   அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி  கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்  மாவட்டங்களில் மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்  பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும்

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web