அடுத்த 5 நாட்களுக்கு கனமழை!! வீட்டை விட்டு வெளியே வராதீங்க!!

 
மழை

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,  தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் ஜூலை 11ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்டங்களை பொறுத்தவரை கனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மழை

நாளை ஜூலை 8ம் தேதி தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 9ம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால்  பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 10 மற்றும் 11ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

உ.பி கன மழை


சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  அடுத்த 24 மணி நேரத்திற்கு  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.  தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  வீசக்கூடும். வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி  55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.      லட்சத்தீவு பகுதிகள், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளி  காற்று 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.   லட்சத்தீவு பகுதிகள், வடக்கு கேரள- கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக் காற்று  65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.இதனால் மீனவர்கள்  மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web