விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை... குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்!

 
வெள்ளம்

தமிழ்நாட்டில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் தெற்கு கேரளா பகுதிகளில்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் நேற்று இரவு 8 மணி அளவில் பெய்ய தொடங்கிய  மழை இன்று காலை 6 மணி வரை சுமார் பத்து மணி நேரமாக வெளுத்து வாங்கியது.

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை !

ஒரே நாள் இரவில் மாநகரில் அதிகபட்சமாக 15 செமீ மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையின் காரணமாக திருப்பூர் மாநகரம் மட்டுமின்றி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.  

கனமழை

திருப்பூர் அறிவொளி நகரில் 3000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், பெண்கள், குழந்தைகள் என ஏராளமான மக்கள்  வசித்து வருகின்றனர். இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக, இப்பகுதி பெரும் வெள்ளக்காடாக மாறி உள்ளது. மழை காரணமாக மின் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்த எலக்ட்ரிக் பொருட்கள் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. தற்போது வரை, மின்சாரம் வரவில்லை என குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.  குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் தேங்கியுள்ளதால், விஷசந்துக்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web