நெல்லையில் கனமழை... மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை!

 
மணிமுத்து ஆறு மணிமுத்தாறு

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக  பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து  பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

மணிமுத்தாறு

இதன் காரணமாக ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.  சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. 

மணிமுத்தாறு அருவி

தொடர்ந்து  அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு 3வது நாட்களாக வனத்துறை தடை விதித்துள்ளது. நீர்வரத்து குறைந்த பின்பே சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?