வடமாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழை... 7 பேர் பலி!

 
 டெல்லியில் கனமழை

தலைநகர் டெல்லி,   உபி, காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா உட்பட  வடமாநிலங்களில் நேற்று அதிகாலை கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் 100க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. மோசமான வானிலை காரணமாக 200க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. 

மழை

தென்மேற்கு டெல்லியின் நஜாப்கர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது மரம் விழுந்ததில் 28 வயதுடைய ஒரு பெண்ணும் அவரது 3 குழந்தைகளும் உயிரிழந்தனர்.உத்தரப்பிரதேசத்தில், மின்னல் தாக்கியதில் மூன்று பேர் உடல் கருகி பலியாகினர். 

விடுமுறை பள்ளி இன்று மழை கனமழை

பலர் படுகாயமடைந்தனர். டெல்லி, குருகிராம், பரிதாபாத் மற்றும் மதுராவில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. டெல்லியில் அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை மூன்று மணி நேரத்தில் 77 மிமீ மழை பெய்தது. காஷ்மீரில் செனாப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ரியாசி மற்றும் அக்னூர் ஆற்றங்கரைக்கு அருகில் செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web