திருச்செந்தூரில் தொடர் மழை... கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சிவன் கோயில் உள்ளே மழை நீர் புகுந்தது.
திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதியிலும் மழை பெய்தது. திருச்செந்தூரில் நாழிக்கிணறு பேருந்து நிலையம் செல்லும் வழி, சபாபதிபுரம் தெரு சந்திப்பு, தினசரி சந்தை, ஜீவா நகர், பகத்சிங் பேருந்து நிலையப் பகுதியில் மழை நீரானது குளம் போல தேங்கியது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல அவதியடைந்தனர்.
இந்நிலையில் தொடர் மழையால் திருச்செந்தூர் சிவன் கோயிலில் மழை நீர் உள்ளே புகுந்தது. மழைநீரை திருக்கோயில் தூய்மைப் பணியாளர்கள் வெளியேற்றினர். மாசித் திருவிழாவிற்கு சிவன் கோயில் இருந்து சப்பரங்கள் புறப்பாட்டுக்கும், பிரதோஷ வழிபாட்டுக்காக வந்த பக்தர்களும் தேங்கியிருந்த மழை நீரால் அவதியடைந்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!