கனமழை... இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?!

 
விடுமுறை
தெற்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருந்த நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மழை

நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

விடுமுறை

அதே போன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களிலும் இன்று அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web