கனமழை... இன்று 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
வங்கக்கடலில் வலுவிழந்த 'டிட்வா' புயலின் தாக்கமும், தொடர் கனமழையும் காரணமாகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இன்று (டிசம்பர் 3, 2025) ஏழு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தால் 'அதி கனமழைக்கான ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக, மாவட்ட ஆட்சியர்கள் அவசரமாக இந்த விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் இன்று பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்படுகின்றன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் சினேகா அறிவித்துள்ளார். அண்டை மாநிலமான புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மழையின் தீவிரம் மற்றும் அத்தியாவசியப் பணிகளைக் கருத்தில் கொண்டு, மேலும் இரண்டு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது: திருவண்ணாமலை மாவட்டத்திலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு மாவட்டங்களிலும் உள்ளூர் விடுமுறை காரணமாக, பள்ளி, கல்லூரிகள் மட்டுமல்லாமல் அரசு அலுவலகங்களும் இன்று செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் ஒத்திவைப்பு அறிவிப்பு!
தொடர் கனமழையின் காரணமாக இன்று (டிசம்பர் 3) நடைபெறவிருந்த பல பல்கலைக்கழகத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் இன்றைய தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகப் பல்கலைக்கழக நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. ஒத்திவைக்கப்பட்ட இந்தத் தேர்வுகளுக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாகப் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
