இன்று தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! மேலும் 3 நாட்களுக்கு மழை தொடரும்!

 
மழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் வெயில் சதமடித்து வரும் நிலையில், இன்று 19 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது உண்மையில் மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் 3 தினங்களுக்கு தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடும் வெயில் நிலவி வரும் நிலையில், நேற்று பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை,  உட்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயில் மாஸ்க் மாணவிகள் இளம்பெண்கள்

இன்னும் அக்னி நட்சத்திரமும், கத்திரி வெய்யிலும் ஆரம்பிக்காத நிலையில், இப்போதே தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் சதமடித்து மக்களை வதக்கி எடுத்து வருகிற நிலையில், சந்தோஷ செய்தியாக இந்த மழை அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருவதால், இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.  இதே போல் ஏப்ரல் 25ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.  

கன மழை

சென்னையைப்  பொறுத்த வரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 38-39 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும் என்றும் அறிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னையில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web