தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை... நீலகிரி, கோவைக்கு தொடரும் ரெட் அலர்ட்!
தென்னிந்திய பகுதி மேலாக உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று ஜூன் 15ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்யும் முன்னெச்சரிக்கையாக ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவைக்கு மிக கனமழை எச்சரிக்கையாக ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களிலும் கனமழைக்கான வாய்ப்பு நிலவுகிறது.
நாளை ஜூன் 16ம் தேதி நீலகிரிக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்தும் மற்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் ஜூன் 17ம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் மீண்டும் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
