கனமழை எச்சரிக்கை... இன்று சென்னை உட்பட இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
இன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். வங்கக்கடலில் உருவான 'டிட்வா' புயல் வலுவிழந்த போதிலும், அதன் தாக்கத்தின் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ச்சியாகக் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழை தீவிரம் குறையாமல் நீடிப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மழையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், இரண்டு மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று டிசம்பர் 4ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் (அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார்) இன்று (டிசம்பர் 4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ச்சியான கனமழையைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் பாதுகாப்பு கருதி, டிசம்பர் 4ம் தேதி அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்துச் சிக்கல்கள் நீடிப்பதால், மாவட்ட நிர்வாகங்கள் இந்த அவசர முடிவை எடுத்துள்ளன. பெற்றோர்களும் மாணவர்களும் இந்த அறிவிப்பைப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
