தமிழக டெல்டா மாவட்டங்களில் கனமழை!
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை தொடர்கிறது. மலாக்கா ஜலசந்தி, தெற்கு அந்தமான் கடல், குமரிக் கடல் பகுதிகளில் நிலவும் புயல் சுழற்சி காரணமாக, தென் தமிழக பகுதிகளில் மழை தீவிரம் அதிகரித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில் காலை மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் வானம் கருமேகமாக மூடியது, சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பதிவாகி வருகிறது.

இதற்கு முன் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்தது. வானிலை நிலைமை மேலும் மாறுபடும் வாய்ப்பு இருப்பதால், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
