இன்று மதியம் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. பத்திரம் மக்களே!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் தட்பவெப்பநிலை மாற்றத்தின் காரணமாக, இன்று (நவம்பர் 22, 2025) மதியம் 1 மணி வரை 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திடீரென ஏற்பட்டுள்ள இந்த வானிலை மாற்றத்தால், பொதுமக்களும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் நிர்வாகத்தினரும் உஷாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில பகுதிகளிலும், அத்துடன் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டிருந்தது. குறிப்பாக, வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சில குறிப்பிட்ட மாவட்டங்களில் அதிகனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் தென் தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் முக்கியப் பகுதிகள் உட்பட 15 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் 'மழை எச்சரிக்கை' விடுத்துள்ளது. இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை.ஆகிய மாவட்டங்களில் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று வடக்கு மற்றும் டெல்டா மண்டலத்தில் செங்கல்பட்டு, சென்னை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், அடுத்த சில மணி நேரங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், குறிப்பாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மழையின் தாக்கம் தலைநகர் சென்னையிலும் உணரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதால், சாலைகளில் நீர் தேங்குவதைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்துள்ளது.
மழைக்காலங்களில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, தேவையின்றிப் பயணங்களைத் தவிர்ப்பதன் மூலம் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
