கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம்.. சிறுவன் உட்பட 2 பேர் மின்சாரம் தாக்கி பலி!

 
கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம்.. சிறுவன் உட்பட 2 பேர் மின்சாரம் தாக்கி பலி!  
கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.  இந்நிலையில் கனமழை காரணமாக மின்சாரம் தாக்கியதில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு மழையின் காரணமாக தரைதளத்தை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இதனால் மின்மோட்டார் உதவியுடன் வெள்ள நீரை அகற்றும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் பரத் என்பவரின் 12 வயது மகன் தினேஷ் அவருக்கு உதவி செய்து கொண்டிருந்தார்.  திடீரென மின் மோட்டாரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டதாக மின்சாரம் பாய்ந்தது.
இருவரும் மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  முன்னதாக கனமழையின் போது சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு 35 வயது பெண் உயிரிழந்ததாக கருதப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது