இன்று முதல் 9 மாவட்டங்களில் கனமழை... 3 நாட்களுக்கு வெளுக்க போகுது வானம்!
Updated: Feb 27, 2025, 09:11 IST

இன்று முதல் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை நேரத்தில் நீர் நிலைகளிலோ, தனியாகவோ சிறுவர்கள், கர்ப்பிணிகள், முதியோர்களை வெளியே அனுப்பாதீங்க. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வறண்ட வானிலையில், வெயிலும் அதிகரித்து வருகிறது. இன்னும் கோடைக் காலம் துவங்கவேயில்லை அதற்குள்ளாகவே வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் நல்ல செய்தியாக இன்று பிப்ரவரி 27ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை தமிழகத்திற்கு கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் பிப்ரவரி 27ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உட்பட 9 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த மாவட்டங்களில் தொடர்ந்து 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web