இந்தோனேசியாவில் கனமழை... நிலச்சரிவு... பலி எண்ணிக்கை 248 ஆக உயர்வு!

 
இந்தோனேசியா கனமழை வெள்ளம் நிலச்சரிவு

ஆசியாவின் தீவு நாடான இந்தோனேசியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை 248 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, மீட்புப் பணிகள் தடைபட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா உள்ளிட்ட மாகாணங்களில் தொடர் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் விளைவாக, சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதோடு, சாலைப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சார விநியோகமும் தடைபட்டுள்ளது.

இந்தோனேசியா நிலச்சரிவு

இந்த நிலையில், கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ளது. இது, இந்தோனேசிய மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 100-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்படும் அபாயம் உள்ள இந்தோனேசியாவில், தற்போது ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் வெள்ளத்தால், கடுமையாகப் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு மீட்புக் குழுவினரால் சென்று சேர முடியவில்லை. குறிப்பாக, வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மத்திய தபனுலி மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா

பாலங்கள் மற்றும் சாலைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதால் மீட்புப் பணிகள் தடைபட்டுள்ளன. இதனால், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

தற்போது, சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு நிவாரண முகாம்களில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்களும், பேரிடர் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தச் சவால்களுக்கு மத்தியில் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்தச் சூழலில், சுமத்ரா தீவில் கடந்த வியாழக்கிழமை காலை ரிக்டர் அளவில் 6.6 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கமும் அப்பகுதி மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!