கன்னியாகுமரியில் கனமழை... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று காலை கொட்டிய கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது.குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடா்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக இதமான சீசன் நிலவுகிறது. இந்நிலையில் நாகா்கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை மழை பெய்யத் தொடங்கிய நிலையில் தொடர்ந்து 1 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

பின்னா் மீண்டும் காலை 9.30 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு இடைவிடாமல் பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.
சுசீந்திரம், அஞ்சுகிராமம், மயிலாடி, கொட்டாரம், கன்னியாகுமரி, தக்கலை, மாா்த்தாண்டம், குலசேகரம் என அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. தொடா்ந்து மழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.காளிகேசம் ஆற்றில் தண்ணீா் கரைபுரண்டு ஓடுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடா்மழையால் குழித்துறை தாமிரவருணி ஆறு, வள்ளியாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. எனவே கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
