தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை... சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!

 
ஆரஞ்சு அலர்ட்

தமிழகத்தில் இன்று முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் நவம்பர் 29ம் தேதி சென்னைக்கு அதிகனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் முழுவதும் ஆறுகள், கால்வாய்கள் கொந்தளித்தன. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரித்த நிலையில், பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன. வெள்ளம் பாதிக்கக்கூடிய 72 இடங்கள் அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மழை
 
இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவல்படி, குமரிக்கடல் மற்றும் இலங்கை தென்மேற்குப் பகுதிகளை ஒட்டிய வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று ஆழ்ந்த தாழ்வழுத்தமாகவும், பின்னர் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. மலாக்கா ஜலசந்தியில் உள்ள மற்றொரு தாழ்வழுத்தம் புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால் நூற்றுக்கணக்கான பகுதிகளில் மழை தீவிரமடையும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பனி, மழை
இன்று நவம்பவர் 26ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 27ம் தேதி தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நவம்பர் 28ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் 29ம் தேதி ஆரஞ்சு அலர்ட்: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நவம்பர் 30ம் தேதி சென்னை, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் வானிலை மாற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிகாரிகள் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பலப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!