மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை… !

 
பனி, மழை

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அடுத்த இருநாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வாக வலுவடைந்துள்ளது. மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதும் மழைக்கு காரணமாகும்.

மழை

திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். பிப்.25 அன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை இருக்கலாம். பிப்.26 அன்று தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவில் நம்பியாறு, கழுகுமலை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் 50 மிமீ வரை மழை பெய்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் மேகமூட்டம் நிலவும். அதிகாலையில் சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!