ஆப்கானிஸ்தானில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 17 பேர் பலி - 1,800 வீடுகள் இடிந்து தரைமட்டம்!

 
ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் வடக்கிலிருந்து தெற்கு வரை பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கபிசா, பர்வான், டாய்கண்டி, உருஸ்கான், கந்தஹார், ஹெல்மண்ட், பாட்கிஸ், பர்யாப், படக் ஷான் மற்றும் ஹெராத் ஆகிய மாகாணங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தான்

வெள்ளம் மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். பலர் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. முறையான கட்டுமான வசதிகள் இல்லாததால், சுமார் 1,800-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. ஏறத்தாழ 13,000 ஏக்கர் விளைநிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி நாசமாகியுள்ளன. இது அந்நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் உள்நாட்டுப் போர் காரணமாக, அந்நாட்டின் உள்கட்டமைப்பு மிகவும் பலவீனமாக உள்ளது. இதன் காரணமாகவே சாதாரண மழையையும் தாங்க முடியாமல் கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன.

ஆப்கானிஸ்தான்

தற்போது தலிபான் அரசாங்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப் படைகளை அனுப்பி, மக்களைத் தற்காலிக முகாம்களில் தங்க வைத்துள்ளது. சேத மதிப்பை கணக்கிடத் தனிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!