இலங்கையில் கனமழை, நிலச்சரிவு... பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு... டித்வா புயலால் மேலும் அச்சம்!

 
இலங்கை வெள்ளம்

வங்கக் கடலில் 'டித்வா' புயல் உருவாகியுள்ள நிலையில், இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகப் பெய்து வரும் பலத்த மழை மற்றும் நிலச்சரிவுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கைப் பேரழிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இலங்கையின் 25 நிர்வாக மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மழை

தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, மத்திய மலை மாவட்டங்களில் மட்டும் நிலச்சரிவுகளால் 18 பேர் மரணமடைந்தனர். அதிகபட்சமாக, பதுளை மாவட்டத்தில் 23 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவுகளில் சிக்கி பலர் காணாமல் போய்விட்டனர் என்று அந்நாட்டின் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. சுமார் 6,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தற்போது இலங்கை கடல் பகுதியில் உருவாகியுள்ள 'டித்வா' புயல் காரணமாக, அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் கூடுதல் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, வடக்கு மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் தொடர்பாக அதிபர் அநுரகுமார திசாநாயக அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

கனமழை வெள்ளம் மீட்பு பணி குழுவினர் பேரிடர்

கனமழை மற்றும் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை நாடாளுமன்ற நடவடிக்கைகளும் நேற்று (நவம்பர் 27) நடைபெறவில்லை. அடுத்த சில நாட்களுக்கு மழை தொடர்ந்து நீடிக்கும் என்று முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் யாரும் ஆபத்தான பகுதிகளில் தங்காமல், உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!