டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழை... வீடு இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி!

 
டெல்லி  கனமழை
டெல்லியில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம், மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்திருந்தது. 

தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று விடிய விடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. அந்த வகையில் லாஜ்பத் நகர், ஆர்கே புரம், துவாராகா உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சாலையில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தது. மேலும் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது. 

டெல்லி  கனமழை

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) டெல்லிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் டெல்லியில் நாளை வரை இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.

மேலும் உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மணி நேரங்களுக்கு கடுமையான இடியுடன் கூடிய மழை மற்றும் மணிக்கு 70 முதல் 80 கிமீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக டெல்லியின் ஜாபர்பூர் காலா பகுதியில் ஒரு வீட்டின் மீது மரம் விழுந்ததில் 3 குழந்தைகள், ஒரு பெண் என 4பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில், டெல்லியின் சாவாலாவில் ஒரு வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் 4 பேர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்தனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (IGIA) நாட்டின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான விமான நிலையமாகும். இந்த விமான நிலையத்தில் தினந்தோறும் சுமார் 1,300 விமான இயக்கங்கள் கையாளப்படுகின்றன. இதனிடையே, மோசமான வானிலை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் சுமார் 200 விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

டெல்லி  கனமழை

மேலும் டெல்லியில் தரையிறங்க வேண்டிய 2 விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், ஒரு விமானம் அகமதாபாத் விமான நிலையத்திற்கும் திருப்பி விடப்பட்டுள்ளது. வானிலை சீரான பிறகு விமான சேவைகள் வழக்கம்போல் இயங்கும் என ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன. 

இன்று வானிலை பாதகமான வானிலை காரணமாக ஏற்பட்ட இடையூறுகள் இருந்த போதிலும், டெல்லி விமான நிலையத்தில் விமான நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன என்று தகவல் வெளியாகி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web