தமிழகத்தில் அதி கனமழை... இன்று 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை... பத்திரம் மக்களே!

இன்று தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு அதிகன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் வடக்கு கர்நாடக கடல்பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, இன்று ஜூன் 14 முதல் 17ம் தேதி வரையில் கேரளத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் கடலோரப் பகுதிகளில் கனமான காற்று வீசக்கூடும் என்பதால், கேரளம் - கர்நாடகம் - லட்சத்தீவு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து கனமழை அதிகரிக்கக் கூடும் என்பதால் இன்று ஜூன் 14ம் தேதி 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் மற்றும் 2 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
நடப்பாண்டில் கேரளத்தில் பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில் அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ளூர்வாசிகளின் இயல்பு வாழ்க்கையை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!