இன்று 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை !

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதாகவும் அதன்படி மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் தென் தமிழகம் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
இதனால் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உட்பட பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்பிறகு தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தென்காசி, தேனி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அத்துடன் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!