சென்னையில் அதிகாலை முதலே தொடர் மழை… குளிர்ச்சியில் மிதக்கும் நகரம்!

 
பனி, மழை

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக கடலோர தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சென்னையின் பல பகுதிகளில் அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், செண்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை கொட்டியது. காமராஜர் சாலை, மெரினா பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மழை காரணமாக சென்னை மாநகர் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. வழக்கத்தை விட வெப்பம் குறைந்ததால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். சில இடங்களில் சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!